Latest News

Friday 17 February 2017

தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவியேற்றிருக்கிறார். இந்த இடத்திற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருந்ததை மக்களும் அவதானித்து தான் வந்தார்கள். இந்நிலையில் முடிவு செய்து விட்டார்கள் மாணவக்கண்மணிகள் மற்றும் இளஞ்சிங்கங்கள். கோவையிலும், சென்னையிலும் வரும் ஞாயிறு நாட்டை மீட்க மாணவர்கள் களம் காண்கிறார்கள். கோவை வ.உ.சி மைதானத்தில் முதல்கட்டமாக மூவாயிரம் மாணவர்களும், மெரினாவில் ஐந்தாயிரம் மாணவர்களும் கூடுகிறார்கள். தேவைப்பட்டால் போராட்டம் ஒரு மாதம் கூட நீடிக்கும். யாரும் எங்களுக்கு உணவு தர வேண்டாம், நடிகர்கள், அரசியல்வாதிகள் வரக்கூடாது. எங்கள் உணவை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். சோறு போட்டு சொல்லிக் காண்பிக்கும் கூட்டத்தின் மத்தியில் அந்த உணவு எங்களுக்கு வேண்டாம். இது எம் தலைமுறைக்கான போர். பொது மக்கள் கலந்து கொள்ளுங்கள். போனமுறை போலீஸ் எங்களை சுட்டுக் கொலை செய்ய திட்டம் போட்டது. சசிகலாவின் பினாமி ஆட்சியை ஒத்துக்கொள்ள மாட்டோம். விரட்டிவிட்டுத் தான் திரும்புவோம் என்கிறார், கோவை மாணவர் சின்னராசு. இம்முறையும் போலீஸ் எங்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய்ந்தாலும் ஓயாது எங்கள் போராட்டம், என்று தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment

Recent Post